பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (முடிவடைந்தது) நடத்தலாமா? ரத்து செய்யலாமா? மதிப்பெண் வழங்கும் முறை? இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் ... tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம். (முடிவடைந்தது)
14417 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம். (முடிவடைந்தது) ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம். Thanks for using the Namma Kalvi appVersion 2.0 will be available on Google Play Store from 4th June 2021 Kindly update the app Changes and Improvements
For any doubts, contact us.
பிளஸ் 1 பொது தேர்வு நேற்று துவங்கிய நிலையில், புதிய பாட திட்டத்தில், தமிழ் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 பொதுதேர்வு, 2017 - 18ம் கல்வி ஆண்டில் அறிமுகமானது. இதன்படி, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு, பிளஸ் 1 பொது தேர்வு, நேற்று துவங்கியது. இந்த தேர்வில், 8.16 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தேர்வு நடக்கிறது. புதிய வினாத்தாள் முறை அறிமுகமாகியுள்ளது. அதேபோல, மொழிப் பாடங்களுக்கு, இரண்டு தாள்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரே தாள் தேர்வு அறிமுகமாகி உள்ளது. இப்படி பல்வேறு மாற்றங்களுடன் நடக்கும் பொதுத் தேர்வு என்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், நேற்றைய பொதுத் தேர்வு, மாணவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. மொத்தம், 90 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில் கேள்விகள் இடம் பெற்றன. வினாத் தாள் குறித்து, சென்னையை சேர்ந்த தமிழ் ஆசிரியை, ஜெயலட்சுமி கூறியதாவது:புதிய பாட திட்டம், புதிய தேர்வு முறையால், மாணவர்களுக்கு அதிக பயிற்சி அளித்தோம். வினாத் தாள் எளிமையாகவே இருந்தது. வினாத் தாளில், மாணவர்கள் யோசித்து பதில் அளிக்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் உள்ளது போல,தரமான கல்வியை, தமிழக மாணவர்கள் பெறும் வகையில், வினாத் தாளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவ - மாணவியர் தேர்ச்சி பெறுவதில் பிரச்னை இல்லை. அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அதிக பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார். பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும்உள்ள 2,914 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 659 பேர் எழுதினர். இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், புதியமுறைப்படி 90 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் தேர்வுநடத்தப்படுவதால் அதிக எதிர்பார்ப்புஇருந்தது. இந்நிலையில் ஆங்கில வினாத்தாளில்பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தன.ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் மட்டும் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இலக்கணம் சார்ந்த கேள்விகளும் கடினமாக இருந்தது என மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கணிதம், விலங்கியல் போன்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 1 தேர்வு மார்ச் 22-ம் தேதி முடியவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 1 கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இடம் பெற்றதால், தேர்வெழுதிய மாணவர்கள் திணறினர்.
பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. மூன்று பாடங்களிலும், எதிர்பார்ப்புக்கு மாறான புதிய கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றன. புதிய முறை வினாத்தாளுக்கு விடை அளிக்க, மாணவர்கள் திணறினர். வணிகவியல் வினாத்தாள் குறித்து, சென்னை சவுகார்பேட்டை, எம்.பி.யு.,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், ஆர்.ஆனந்தன் கூறுகையில், ''மாணவர்களின் தேர்ச்சிக்கு பிரச்னை இருக்காது. ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதியில், தலா, ஒரு கேள்வி கடினமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் கேள்விகள் முழுவதும் எளிதாக இருந்தன,'' என்றார். சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர், பழனி கூறுகையில், ''30 மற்றும் 40ம் எண் கேள்விகள் கடினமாக இருந்தன. 85 சதவீத கேள்விகள், பாடத்தின் பின் பக்கத்தில் உள்ளவை. 33 பாடங்களில், மூன்று பாடங்களில் கேள்விகளே இடம் பெறவில்லை. சராசரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது சிரமம்,'' என்றார். விலங்கியல் பாடம் குறித்து, எம்.சி.டி.எம்., பள்ளி ஆசிரியர், இளங்கோ கூறியதாவது:பிளஸ் 1 புதிய பாட திட்டத்தை நிரூபிக்கும் வகையில்,அனைத்து கேள்விகளும் புதிதாக இருந்தன. சராசரி மாணவர்கள் சிலர்,விலங்கியல் பாட பிரிவின் மீது கவலை ஏற்படும் வகையில், கொஞ்சம் கடினமான கேள்விகள் இடம் பெற்றன. பாடத்தின் பின்பக்க கேள்விகள் மிக குறைவு. சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையிலான, மிகவும் தரமான வினாத்தாள். ஆனால், இந்த வினாத்தாளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், இன்னும் அதிகமாக தயாராக வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன.
வினாத்தாள் குறித்து மாணவர்கள் கூறியதாவது: உயிரியல் தேர்வை பொருத்தவரை, ஒன்று மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்ற கேள்விகள் ஈஸியாக இருந்ததால் சமாளித்துவிட்டேன். இல்லையேல் திணறியிருப் தாவரவியல் தேர்வில் நம்பிக்கையாக வரும் என்று நினை த்து படித்த எந்த கேள்வியும் வரவில்லை. மொத்தத்தில் பாஸ் ஆகி விடலாம் என்ற அளவிற்கே இருந்தது. உயிரியல் தேர்வில், 2 மதிப்பெண் கேள்விகள் கஷ்டமாக இருந்தது. பலமுறை படித்த பிறகே கேள்விகளை புரிந்துகொள்ள முடிந்தது. 'டிவி ஸ்ட்' முறையில் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் தேர்வு எதிர்பார்த்தபடி கேள்விகள் வரவில்லை. ஓரளவுக்கு ஈஸிதான். இருந்தாலும், 5 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் ஆழமாக கேட்கப்பட்டிருந்ததால் சிரமமாக இருந்தது. |